2021 மே 08, சனிக்கிழமை

‘யாரை யார் நம்புவது?’

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களைத் தேவையின்றி ஒருவர் பாராட்டுகின்றார் என்று உணர்ந்தால் உங்களுக்குச் சங்கடமாக இருக்கும். உண்மையில் பாராட்டுதலுக்குத் தகுதியிருந்தால் நீங்கள் வெட்கப்பட்டாலும் பரவாயில்லை. அர்த்தமே இல்லாமல் ஒருவரை முகமன்கூறுவது சற்று யோசிக்க வேண்டிய ஒன்றுதான். 

நாம் ஓரளவாவது எச்சரிக்கை உணர்வுடன் வாழவேண்டியுள்ளது. ஊடகச் செய்திகளைப் பார்த்தால் யாரை யார் நம்புவது? 

நேற்றுத்தான் வந்து கும்பிட்டு மண்றாடி, தேர்தலுக்காக வாக்களிக்குமாறு கேட்டார். எங்களைப் புகழ்ந்து பேசினார். மருண்டோம் நாங்கள். நடந்தது என்ன? அந்தப் புண்ணியவான் தேர்தலில் வென்ற பின்னர், அனைத்தும் மறந்து எங்களை யார் என்று கேட்கின்றார்.  

ஒருசில பிரகிருதிகளுக்காக எல்லோரையும் ஒரே பார்வையில் பார்த்தல் கூடாது. நல்லோர்கள் இல்லாத உலகம் இல்லை. எதனையும் எதிர்பாராத மக்களும் இருக்கின்றார்கள். மிக எளியோரே அவர்கள். 

வாழ்வியல் தரிசனம் 14/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X