2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 16/03/2016

Princiya Dixci   / 2016 மார்ச் 16 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல சாதனையாளர்களை உலகம் கண்டு கொள்வதில்லை. இதனால் பலமேதைகளை நாம் தெரியாமலேயே இருக்கின்றோம். அறிவு உலகத்தில் சஞ்சரிப்பவர்களே வேண்டுமென்றே தங்களை விட மேலானவர்களை மறைத்து வைத்திருக்கின்றார்கள்.

முந்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த இசைமேதை உத்தக்காடு வேங்கட சுப்பிரணியம் அவர்கள் பற்றிய வரலாற்றுப் படைப்புகளை பலர் தெரியாமலேயே இருந்து வந்தனர். பல கீர்த்தனைகளை எமக்குத் தந்த இசைத்துறை வள்ளல் இவர்.

ஆனால், அவர் இறந்து இருநூறு வருடங்களின் பின்னர், அவரது வழி வந்தவரொருவர் இவரைப்  பற்றி ஆராய்ந்து, இவர் எழுதிய இசைப் பொக்கிஷங்களை உலகுக்கு வெளிப்படுத்தினார். இன்று, இவரது கீர்த்தனை பாடாத பாடகர்கள் இல்லை.

சூரியனை உள்ளங்கையால் மறைக்க முடியாது. பீறிட்டு வரும் நதியின் பாய்ச்சலைக் குறுக்கே நின்று தடுக்க முடியுமா? திறமைகள் என்றோ ஒருநாள் வெளிப்பட்டேயாக வேண்டுமென்பது இறைவன் கட்டளை. திறமைசாலிகளை தூக்கிநிறுத்துக.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--