2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மற்றவர்களின் முன்னால் உணவு உட்கொள்ளத் தயங்குகிறீர்களா?

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதன் உயிர் வாழவும் ஆரோக்கியமான உடலை பெற்றுக்கொள்ளவும் உணவு என்பது மிக முக்கியமானது. மனிதன் கடுமையாக உழைப்பதன் பிரதான நோக்கம்கூட அந்த உணவைப் பெற்றுக்கொள்வதுதான். வீதியோரங்களில் வறுமையில் வாழ்பவர்களுக்குத்  தெரியும் உணவின் பெறுமதி எத்தகையது என்று.

உடலை சோர்வின்றியும் நோய்நொடிகள் இன்றி  இயங்கவைப்பது. ஆரோக்கியமாக இருந்தால்தான் எமது செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்து செல்ல முடியும். காலை, பகல், இரவு என மூன்று வேளைகளிலும் நாம் உணவு கொண்டால்தான் ஆரோக்கியமான உடலை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், இப்போது சிலர் மற்றவர்களுக்காகத்தான் உணவு உண்கிறார்கள். அதாவது, மற்றவர்கள் பார்க்கின்றார்கள் என்பதற்காக தங்களது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்கின்றார்கள்.


இதில் அதிகமாக பாத்திரமேற்பவர்கள் பெண்கள்தான். பொதுவாக, பெண்களைப் பொறுத்தவரை மெல்லிய உடலுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இவர்கள் மெலிவாக இருந்தாலும் பொதுவாக நன்கு உண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், பொது இடங்களிலோ இவர்களது உணவுப் பழக்க வழக்கங்கள் வேறாக இருக்கும்.

நன்கு உண்ணக்கூடிய இவர்களை மற்றவர்கள் பார்த்து "நீதான் நன்கு உண்கின்றாயே பிறகு ஏன் மெலிவாய் இருக்கின்றாய்?"; என்று கேட்பார்கள் என்பதற்காக தங்களது உணவுப்பொதியை சுருக்கிவிடுவார்கள்.

அப்போது மற்றவர்கள் உணவுப்பொதியை பார்த்துவிட்டு கேலி செய்வார்கள். இவ்வாறு கேலி செய்வதை விரும்புபவர்கள் தங்களது உணவுப்பொதிகளை சிறிய பிள்ளைகள் உண்ணும் அளவிற்கு குறைத்துவிடுவார்கள்.

இதைவிட பலர் கூடியிருந்து உண்ணும்போது சிலர் சிறிதளவு உணவை உட்கொண்டு விட்டு மீதியை அப்படியே எறி;ந்து விடுவார்கள். கேட்டால், "நான் இவ்வளவுதான் சாப்பிடுவேன்" என்ற பதில் வரும்.

இன்னும் சிலரது உணவுப் பழக்கமே வேறாக இருக்கும். இவர்களுக்கு காலை, பகல் , மாலை இந்த மூன்று வேளையும் பிரதான உணவு சொக்லைட் போன்று இனிப்புப் பண்டங்களும் மேலைத்தேய உணவு வகைகளும்தான். மற்றவர்கள் தம்மை பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகள் இவை.

இவர்களில் ஒரு வேளை மாத்திரம் உணவு உட்கொண்டுவிட்டு இரண்டு வேளைகள் உணவைத் தவிர்த்துக்கொள்பவர்களும் உள்ளனர். 

இவ்வாறான முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்காளால் நோய்களைத்தான் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு வேளை உணவு  உட்கொண்டு இரண்டு வேளைகள் உண்ணாமல் விடுவதால் குடற் புண் ஏற்பட்டு இது பல நோய்களை இயல்பாகவே ஏற்படுத்திவிடும்.

குடற்புண் நோய் இருப்பதை பெருமையாக சொல்லிக்கொள்பவர்களும் எம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள். இந்தக் குடற்புண் அதிகமானால் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். முறையான உணவு பழக்கம் இல்லாத போது முகத்தில் பரு ஏற்படுதல், வாய் துர்நாற்றம் வீசுதல், உடல் பலவீனமுறுதல்  போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் அசௌகரியங்களையே தோற்றுவிக்கும்.

முறையான உணவுப் பழக்க வழக்கங்களை எமது நாளாந்த வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதுடன்  நாமும் அழகுடன் மிளிரலாம்.


  Comments - 0

  • Ramesh Sunday, 15 August 2010 02:55 AM

    சிறந்த ஆலோசனை. உணவு விடயத்தில் மற்றவர்களுக்காக நாம் நடித்தால் அது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். அதனால் பாதிப்பு நமக்குத்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--