2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

காதல் ஒரு போதை: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.


காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 

இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள் தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில் தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம். 
 

இந்நிகழ்வின்போது 'திடீரென சிறப்பாக உணரச்செய்யும்' டோபைன், ஒக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயணங்களை உடலில் சுரக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொகேயின் போதைப் பொருளினாலும் இந்த இரசாயணங்கள் த}ண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஸ்டெபானி ஓர்டிக். அவர் நியூயோர்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியர்.


பேராசிரியர் ஓர்டிக்கும் அவரின் குழுவினரும் மேற்கு வேர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மேற்படி ஆய்வை மேற்கொண்டனர்.


இக்கண்டுபிடிப்புகளின் மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல் மருத்துவத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஸ்டெபானி ஓர்டிக் கூறுகிறார்.


சரி, காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு என்ன பதில்?
 

'அது மூளையென்றுதான் நான் கூறுவேன். ஆனால் இதயத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணமாக,  மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்களை ஏற்பட முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும்' என்கிறார் பேராசிரியர் ஓர்டிக்.
 


  Comments - 0

 • xlntgson Sunday, 31 October 2010 08:31 PM

  thavan, காதலினால் சாபவர்கள் அதிகமா, போதையினால் சாபவர்கள் அதிகமா, போதைதான் சாபக்கேடு, ஒத்துக்கொள்கின்றீர்களா? மது
  போதை அருந்தினால் தான், ஆனால் காதல் போதை அருந்தாமலே வருகின்றது என்கிறாரே, திருவள்ளுவர்!

  Reply : 0       0

  xlntgson Tuesday, 02 November 2010 08:42 PM

  ஹெரோஇன் கோகோஇன்- heroin cocoine- போதைகளை விட அல்கஹோல் என்னும் சாராயம் -alcohol- அதிகமான உயிர்களை பலி எடுப்பதாக ஓர் ஆய்வு ஒன்றை இன்றைய ஆங்கில ஏடொன்றில் கண்டேன். லண்டனிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

  Reply : 0       0

  RUSHANTHAN Saturday, 26 May 2012 01:20 PM

  காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய், திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

  Reply : 0       0

  Irfan mohamed Thursday, 28 October 2010 03:40 PM

  ஆகவே, போதைப்பழக்கமுள்ளவர்களை காதலிக்க செய்யலாம். இதன்மூலம் அவர்களை சரி செய்ய முடியும்...

  Reply : 0       0

  xlntgson Thursday, 28 October 2010 09:02 PM

  poadhai porul alla. poadhai porul ponra onru adhaavadhu indha sollappatta harmone ellaam thookkatthai varavalaippavai appadi paartthaal paalil irukkum lactose ennum surappinaal dhaan kulandhaigal thoonguginrana adhanaal avai poadhaiyil irukkinrana enru artthamaa? Thookkatthai undu pannum surappugal namadhu kurudhiyil kalakkum poadhu naam thoongatthai unarginrom adhanaal magilchiyaana sambavangal kooda thookkatthai undu pannum surappugalai nam kurudhiyil kalakka kaaranamaagum idhu or aaraichchiye!

  Reply : 0       0

  thavan Friday, 29 October 2010 07:49 PM

  காதல் போயின் சாதல்

  Reply : 0       0

  sharafa Thursday, 22 August 2013 11:18 AM

  காதல் மிகவும் ஆபத்து

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--