Gavitha / 2015 பெப்ரவரி 03 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலநிலை மாற்றத்துக்கேற்ப எமது முகத்தின் பொலிவுத்தன்மை மாறிவிடும். முகத்தை பொலிவாக வைத்துக்கொள்வதற்காக, பல்வேறு உத்திகளை கையாள்வது பெண்களின் வழக்கமாகும்.
அந்த வகையில், எமது சருமத்தை இளைமையான தோற்றமாக வைத்துக்கொள்வதற்கு, எமது மரபணுவே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆம், தற்போது நவீனமாக அறிமுகமாகியுள்ள கிறீம் வகைகள் ஒருபுறமிருக்க, மனித குருதியை பயன்டுத்தி புதிய வகையான கிறீமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
இதன் விலை 950 பவுண்கள். இதனை ஜேர்மனியில் உள்ள அழகு சிகிச்சை மருத்துவர் பார்பரா ஸ்டர்ம் தயாரித்துள்ளாராம். இந்த கிறீம் தற்போது லண்டனில் உள்ள டோசெஸ்டர் ஹோட்டலில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிறீம், குருதியில் உள்ள புரதங்களையும் வளர்ச்சிக்கான காரணிகளையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
இது, வயதான தோற்றத்தை குறைக்கவும் முகங்களில் பரு ஏற்படுவதை தடுக்கவும், முகத்தில் ஏற்படும் துளைகளை சுருங்கச்செய்து இறந்த திசுக்கள் புதுப்பிக்கவும் முகத்தில் ஏற்படும் வீக்கம் குறைய உதவியாக இருக்கும் என்று அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago