2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கெண்டைக்கால் தசையை சுருங்க செய்து உபாதை ஏற்படுத்தும் உயர் குதி பாதணிகள்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்ந்த குதி பாதணிகளை அணிவோர், தட்டையான பாதணிகளை அணியும் போது நோவுக்குட்படுவதன் காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், உயர்ந்த குதி பாதணிகளானவை கெண்டைக்கால் தசைகளை குறுகச் செய்யுமென X - கதிர் ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இதன் காரணமாகவே மேற்படி உபாதை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

அதிகமாக குதி உயர்ந்த பாதணிகளை அணியும் ஒரு குழுவின் கெண்டைக்கால் தசையை ஸ்கேன் செய்து பார்த்த போது அது 13 வீதமளவில் குறுகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டனர். பரிசோதனை உயிரியல் இதழ் உயர் குதிகள் கெண்டைக்கால் தசையின் சிரைகளே (Tendon) இந்த குறுகலுக்குக் காரணமென இந்த ஆய்வு புழப்படுத்தியுள்ளதாக கூறுகின்றது.

சிறிது காலம் தட்டையான சப்பாத்துக்களை அணிவதும் சில பயிற்சிகளும் குறுகிப் போனத் தசையை பழைய நிலைக்கு கொண்டுவருமென நிபுணர்கள் கூறுகின்றனர். சமி மார்க்கோ என்னும் இயன் மருத்துவர் (Physiotherapist) பல வகையான குதிகளைக் கொண்ட பாதணிக்ளை மாறி மாறி அணிவது பாதுகாப்பானது எனக் கூறுகிறார்.

உயர் குதி சப்பாத்துக்களை அணிவோருக்கான பயிற்சி ஒன்றை இவர் சிபாரிசு செய்துள்ளார். "ஒரு படியின் விளிம்பில் கால் விரல்களின் நுனியில் நில்லுங்கள். படிக்கட்டின் பாதுகாப்பு சட்டத்தை பிடித்துக்கொண்டு குதியை இயன்றளவு கீழே பதியுங்கள்." இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உயர் குதி சப்பாத்துக்களை அணிவதால் ஏற்படும் உபாதைகளிலிருந்த தப்பிக்க முடியும் என்று சமி மார்க்கோ தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--