2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

குருசடிதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம், குருசடிதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது.

இம்மாதம் 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நற்கருணைத் திருவிழாவும் நேற்று திருநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில், அருட்பணி ஜெபரெட்ணம் அடிகளார், அருட்பணி ஸ்ரோபன் அடிகளார், பங்குத்தந்தை அருட்பணி அன்ரனிபாலா அடிகளார் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, புனித அந்தோனியாரின் புனித சொரூபம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .