George / 2016 ஜூலை 12 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 13, பெனன்டிக் மாவத்தையில் அமைந்துள்ள தேவ இரகசியத்தின் ரோஜா மாதா ஆலயத்தின் 69ஆவது வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வும் திருச்சொரூப பவனியும் நாளை இடம்பெறவுள்ளது.
ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் கடந்த 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியதுடன் நாளை அதன் இறுதி நாளாகும்.
இன்று காலை 9 மணியளவில் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளது. 7ஆவது ஒழுங்கையில் ஆரம்பமாகும் பவனி, புளுமென்டல் வீதி, புளுமென்டல் குறுக்கு வீதி, பெனன்டிக் மாவத்தை, 6ஆம் ஒழுங்கை, புளுமென்டல் வீதி ஊடாக ஒழுங்கையை வந்தடையும்;.
இதேவேளை, தினமும் மாலை 5.30 மணிக்கு நவநாள் ஜெபமாலை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .