2021 மே 06, வியாழக்கிழமை

20 வருடங்களுக்குப்பின் அரியாலை வேளாங்கன்னி ஆலய திருவிழா

Kogilavani   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா, 20 வருடங்களுக்குப் பின்னர்  சனிக்கிழமை (26) நடைபெற்றது.

1965 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இவ் ஆலயம் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்ச் சூழல் காரணமாக முழுமையாக சேதமடைந்தது.

2011 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயமும் புனரமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கு பின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ் ஆலயம் நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளதால் சனிக்கிழமை(26) அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .