2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வருடாந்த திருவிழா

Sudharshini   / 2016 ஜூலை 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆர்.ரமேஷ்

ஹட்டன் திருச்சிலுவை ஆலய புனித அன்னம்மாளின் 187ஆவது வருடாந்த திருவிழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (10)  நடைபெற்றது, கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை மற்றும் பங்குதந்தை லெஸ்லீ பெரேரா ஆகியோர்  இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி பூசையின் பின் புனித அன்னம்மாளின் திருச்சுரூப ஊர்வலம் ஆலயத்தில் இருந்து ஹட்டன் பிரதான பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

1829ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்குதந்தை லெஸ்லீ பெரேரா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .