2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

முறக்கொட்டான்சேனை முத்துமாரி அம்மன் ஆலய ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேகமும், பால்குட பவணி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்வாலயத்தில் 1993ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதின் ஏழு வருடங்கள்; கழித்து கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி மஹா சங்காபிஷேகம் முடிவடைந்ததை அடுத்து இந்த 1008 சங்காபிஷேகமும், பால்குட பவணியும் இன்று நடைபெற்றது.

களுவான்சிக்குடி மாரியம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரமஸ்ரீ முத்துக்குமார சுவாமி குருக்கள் மற்றும் சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமிகள் ஆலய பிரதம குருக்கள் பிரமஸ்ரீ வசந்தராஜா குருக்கள், ஆகியோர்களது தலைமையில் நடைபெற்ற இப்பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--