2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மன்னார் மடு மாதா ஆலய கொடியேற்றம்

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார் மடு மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இத்திருவிழா தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.  

இத்திருவிழாவின் 10 ஆம் நாளான் 1 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனை நடைபெற்று 2 ஆம் திகதி காலை திருநாள் திருப்பலி நிறைவேற்றம் இடம்பெறவுள்ளதாக  மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எ.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.

திருநாள் திருப்பலியினை மன்னார், அனுராதபுரம்,  யாழ்ப்பாணம் ஆகிய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியக ஒப்புக்கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மடு திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக தென்பகுதியிலிருந்து வருகை தந்துள்ள மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .