2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புல்லுமலை செபமாலை அன்னை ஆலய திருவிழா

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கின் யாத்திரைத் தளங்களில் ஒன்றான மட்டக்களப்பு, புல்லுமலை செபமாலை அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்வாலயத்தின் பங்குத்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலைமையில் கூட்டுத்திருப்பலி மற்றும் திருவிழா என்பன நடைபெற்றன.

இதில் மட்டக்களப்பு மற்றும் திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன்னைய்யா ஜோசப், திருமலை புனித மரியாள் தேவலாயத்தின் பங்குத்தந்தை ஜோர்ஜ் தியாகராசா, மட்டு, திருமலை ஆயர் இல்ல நிதிப்பொறுப்பாளர் அருட்தந்தை கலாநிதி சிறிதரன் சில்வெஸ்டர் உட்பட பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது திருப்பலி கொடுக்கப்பட்டு அன்னையின் ஆசீர்பின்பு திருவிழாவும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--