2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வீச்சு கல்முனை தூய அன்னம்மாள் ஆலய திருவிழா

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கனகராசா சரவணன், மாணிக்கப்போடி சசிக்குமார்


கல்முனை, வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு மறைமாவட்ட ஆயர் பேரருட் தந்தை ஜோசப் பொன்னையா தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 19 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பாமானது.

நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் அன்னையின் திருச்செரூப பவனி இடம்பெற்றதுடன்   கூட்டுத்திருப்பலியும் கொடியிறக்கலும் இடம்பெற்றன

இதில் பங்குத்தந்தை ஜே.ஏ.ஜி.ரொட்னகுமார், பேராலய பங்குத்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், அருட்தந்தைகளான அருட்பணி ஜெகநாதன், திருச்செல்வம், ஜீவன் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

இப்பெருவிழாவில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--