2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கும்பாபிஷேகம் ...

Super User   / 2014 மார்ச் 24 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தே.அச்சுதன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீகந்தசுவாமி தேவஸ்தானத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்ட அஸ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெரும்சாந்தி குடமுழுக்கு புதன்கிழமை (26) சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு  திங்கட்கிழமை (24) ஆலயத்தில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகின.
ஓல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட வரலாற்றினைக்கொண்ட இந்த ஆலயமானது இப்பிரதேச மக்களின் நம்பிக்கையினைக்கொண்ட ஆலயமாக இருந்துவருகின்றது.

கும்பாபிசேகத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஆரம்பமானது.

புதன்கிழமை காலை 6.00மணிமுதல் புண்ணியாக வாசனம் யாகபூசை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, தேவதோத்திர திருமுறை பராயனம், நாதவாத்திய சமர்ப்பணம் உட்பட கிரியைகள் நடைபெற்று தூபி மற்றும் மூலமூர்த்திக்கான மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வினை பிரம்மாதீன குருகுலபீடாதிபதி அருட்கவியரசு விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன்குருக்களின் ஆசியுடன் சிவாச்சாரிய திலகம், கிரியா சிரோண்மணி, சிவாகமசக்கரவர்த்தி சிவஸ்ரீ மு.முத்துக்குமார குருக்கள் நடாத்துகின்றார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .