2020 மே 29, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவன்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில்  தன் கர்ப்பிணி மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த கணவன், தானே நாற்காலியாக மாறிய செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது. 

சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
 
மருத்துவருக்காக காத்திருந்தபோது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. 

மேலும், அங்கு அதிகக் கூட்டமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன் வரவில்லை. 

தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி ‌போல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார். 

இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X