2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

குழந்தைகளை காப்பாற்ற தலைமுடியை விற்ற தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Editorial   / 2021 ஜனவரி 15 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சேலத்தின் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி பிரேமா. செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்த செல்வத்துக்கு, 5 லட்ச ரூபாய் வரை கடன் இருந்துள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த செல்வம், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

கணவனை இழந்த பிரேமா கடும் கஷ்டத்தை சந்தித்துள்ளார், மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பிடவே வழியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

கடன் கொடுத்தவர்களும் சிரமத்தை கொடுக்க, பிரேமாவும் தற்கொலைக்கு முயன்றார், எனினும் உடன் பணியாற்றவர்கள் பிரேமாவை காப்பாற்றிவிட்டனர்.

இந்நிலையில் தன்னுடைய தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். இத்தகவலை சமூகவலைத்தளங்களில் நபர் ஒருவர் வெளியிட, பலரும் உதவி செய்து வருகின்றனர், 

இதேபோன்று மாவட்ட நிர்வாகமும் பிரேமாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .