2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

மருமகள் மறுமணம்; மூக்கை அறுத்த மாமியார்

Editorial   / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறுமணம் செய்து வைக்கும் முடிவுக்கு மறுத்த மருமகளை மாமியார் நாக்கு மற்றும் மூக்கை அறுத்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சங்க்ரா காவல் நிலைய எல்லையில் வசித்து வந்த 30 வயதான பெண் ஒருவர் ஜோத்பூர் மருத்துவமனையில் மூக்கு மற்றும் நாக்கு அறுபட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்டு ஜானு கான் என்பவரை கைது செய்தனர்.

மேலும், பெண்ணின் மூக்கை அறுப்பதற்கு அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நண்பர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையில் மூக்கு அறுபட்ட இளம்பெண், விதவை என்பதும், அவரது மாமியாரான ஜானு கான், மருமகளை தனது உறவினர் ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்க தீர்மானித்தாகவும் தெரியவந்துள்ளது.

அதற்கு மருமகள் சம்மதிக்காததால், உறவினர்களுடன் சேர்ந்து அவரது மூக்கு மற்றும் நாக்கை மாமியார் அறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .