2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தகாத உறவில் அண்ணன் தங்கை: பிரிட்டனில் பரபரப்பு

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில், தகாத முறையில் பாலியல் உறவில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட அண்ணனும் தங்கையும் இரு வருடங்கள் கடப்பதற்குள் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளென்ரோத் பிராந்தியத்தைச் சேர்ந்த 30 வயதான நிக் கெமரூனும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரியான டேனியல் ஹீலியும் உடலுறவில் ஈடுபட்டமை அவர்களின் தாயார் மூலம் பகிரங்கமாகியது.

25 வயதான டானியெல்லா ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயானவர். ஆனால் தனது சகோதரனுடனான தகாத உறவு காரணமாக கணவரைப் பிரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரித்தபோது அவர்கள் தாம் தகாத முறையிலான இந்த உறவில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  அவர்கள் மீண்டும் உடலுறவு கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து தான் மீண்டும் நிக் கெமரூனுடன் உறவுகொள்ளப் போவதில்லை என டானியெல்லா கூறினார்.

ஆனால் இப்போது இருவரும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளமை  மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உடலுறவில் ஈடுபடாமலும் தாம் ஒரே வீட்டில் வசிக்கமுடியும் என இவர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் மீண்டும் தவறு செய்வார்களானால் சிறைத்தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

 • D David Saturday, 17 July 2010 09:46 PM

  இல்லை இதனை மன்னிக்க முடியாது. இறக்கம் காட்டவும் கூடாது.
  கடுமையான தண்டனை தேவை.
  வசந்த குமார்

  Reply : 0       0

  sheen Monday, 19 July 2010 09:45 PM

  தலசேமியாஎன்றொரு நோய் இலங்கையில்இரத்த சம்பந்தமானது,சில குடும்பங்களில்உயிர் கொல்லியாகவும் உள்ளிருந்தே கொள்ளும் நோயாகவும் இருந்து வருகின்றது.இதை முற்றாக ஒழிக்க நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்வதை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்அரசிடம் பரிந்துரை செய்திருக்கின்றனர்,ஆனால் அவர்கள் சகோதரர்கள்அல்ல;ஒன்று விட்ட சகோதரர்கள் அல்லது மாமா மாமி அல்லது மாமி மகள் மாமி மகன் சிற்றப்பா சிற்றன்னை பிள்ளைகள் போன்ற உறவுகள்!இம்மாதிரிஒருதாய் பிள்ளைகள் ஒரேஇரத்தம் ஒரே மரபணு கொண்டவர்கள் உறவு கொண்டால் என்ன நடக்குமோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--