2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மாப்பிள்ளை தோழனான இரண்டு வயது குழந்தை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது ஆண் குழந்தையொன்று தமது பெற்றோருக்கு மாப்பிள்ளை தோழனாக நின்ற விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த லோகன் என்ற இரண்டு வயது குழந்தையே இவ்வாறு தமது பெற்றோருக்கு மாப்பிள்ளை தோழனாக நின்றுள்ளது.

காதலர்களான ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன் ஸ்விடோர்ஸ்கீ ஆகியோருக்கு மாகனாக பிறந்த இக்குழந்தை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் குறித்த பெற்றோருக்கு உணர்த்தியுள்ளனர்.

இதேவேளை, இக்குழந்தை உயிரிழக்கும் தருவாயை அண்மித்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தமது திருமணத்தை 2014 செய்வதற்கு திட்டமிட்டிருந்த மேற்படி காதல் ஜோடி தமது குழந்தையின் இத்தகைய செய்தியை கேட்டு அதர்ச்சியடைந்ததுடன் குழந்தை உயிருடன் இருக்கும்போதே திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.

திருமணத்தில் குழந்தையை மாப்பிள்ளை தோழனாகவும் நிறுத்தியுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .