2021 மார்ச் 03, புதன்கிழமை

நடைபாதையில் பிரசவம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொருட்கள் கொள்வனவுக்காகச் சென்ற கர்ப்பிணித் தாயொருவர், அங்காடித்தெருவொன்றின் வெளிப்புற நடைபாதையில் குழந்தையை பிரசவித்த சம்பவமொன்று அனைவரின் மனதையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான நகரங்களில் ஒன்றான பார்மிங்காமின் புதிய தெருவில் அமைந்துள்ள பிரிமார்க் என்ற புடவைக்கடையொன்றின் வெளிப்புற பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணி பெண்ணுக்கு வலி ஏற்பட்டவுடன் சுற்றுவட்டாரத்தில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்தோர் வைத்தியசாலை அவசரசிகிச்சை வண்டிக்கு தெரிவித்துள்ளனர்.
 
இருந்தும் வலி அதிகரிக்கவே எதிரே இருந்த புடவைக்கடையில் உள்ள புடவைகளினை பயன்படுத்தி அறை போன்ற ஒன்றை அமைத்து அதில் இந்த கர்ப்பிணி பெண்ணை வைத்து பொதுமக்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

பின்னரே பெண்குழந்தையொன்றை அப்பெண் பிரசவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளில் தாயையும் சிசுவையும் வைத்தியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .