2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இ.தொ.காவின் மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2017 மே 23 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெருந்தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை பெற்றுகொடுக்கும் நோக்கில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கொட்டகலையில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை முதல்,  மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெறும் இம்மக்கள் சந்திப்பில், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு தமது பிரதேச பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதுடன், அதற்கான தீர்வுகளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

இச்சந்திப்பு 10 நாட்களுக்கு நடைபெறுமென தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .