வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ஈரானிய யுத்தக் கப்பல்கள் சிரியாவை அடைந்தன

 

ஈரானின் இரு யுத்தக்கப்பல்கள் சிரியாவை அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நாசகாரி கப்பலொன்றும் விநியோகக் கப்பலொன்றும் சிரியாவின்  மத்திய தரைக்கடலோரத்திலுள்ள டார்டஸ் துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும்  இருதரப்பு உடன்படிக்கையின்படி, சிரிய கடற்படையின் பயிற்சிகளில் இக்கப்பல்கள் பங்குபற்றும் எனவும் ஈரானிய தொலைக்காட்சியான பிரஸ் ரீவி தெரிவித்துள்ளது.

ஈரானிய அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் மேற்குலகிற்கும் இடையில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் ஈரானிய கப்பல்கள் சிரியாவை அடைந்துள்ளன. சிரியாவில் தற்போது உள்நாட்டு பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதுடன் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுக்கு அருகிலுள்ள நாடு சிரியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இரு யுத்தகப்பல்கள் சுயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக்கடலை அடைந்துள்ளதாக ஈரானிய கடற்படைத்தளபதி கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். இக்கப்பல்கள் சிரியாவின் துறைமுகத்தில் தரித்து நிற்பதாக ஈரானிய பாதுகாப்பு அசைமச்ர் அஹ்மட் வஹிதி இன்று தெரிவித்துள்ளார்.

இவ்விரு கப்பல்களும் சுயஸ் கால்வாய்க்கூடாக மத்திய தரைக்கடலை அடைந்திருப்பது நாட்டின் கடற்படை ஆற்றலின் குறியீடாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சர்வதேச கடற்பகுதியில் ஈரானிய யுத்தக்கப்பல்கள் பிரசன்னமாகியிருப்பது ஈரானுக்குள்ள இயற்கையான உரிமையாகும்எ னவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இக்கப்பல்கள் இஸ்ரேலிய கரையை அண்மிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றின் நகர்வுகளை இஸ்ரேல் உன்னிப்பாக அவதானிக்கும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Views: 1995

Comments   

 
0#Benjamin2012-02-21 09:50
Isreal alium khalam tholaivil illai
Reply
 
 
0#meenavan2012-02-21 11:26
துருக்கியிலிருந்து காசாவுக்கு அகதிகளுக்கான நிவாரண பொருட்களை ஏற்றி வந்த கப்பலை சர்வதேச கடல் பரப்பில் தாக்கிய இஸ்ரேல், ஏன் தனது வாசல்படியை நெருங்கி விட்ட ஈரானிய கப்பல்களை தாக்காமலுள்ளது? ஈரானின் வல்லமை சியோனிச எஹூதிகளின் உள்ளத்தில் பீதியை உருவாக்கி விட்டதோ?
Reply
 
 
0#Avathani2012-02-22 02:17
இஸ்ரவேலுக்கான ஆப்பு ரெடியகிற்றுடியோய் ......
வாழ்க ஈரான்.
Reply
 
 
0#Brightfull2012-02-22 05:06
மனித நேயத்துக்கான நற்பணியை ஈரான் துவங்கட்டும்
வாழ்த்துக்கள் ஆயிரம் ஈரானுக்கு .
Reply
 
 
0#Deva2012-02-22 05:31
ஈரானுக்கு இன்னும் நல்ல காலம் முடியவில்லை போலும். பொறுத்திருந்து பார்போம்.
Reply
 
 
0#kumar2012-02-22 11:19
அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் இஸ்ரேலை ஒன்றும் செய்ய முடியாது .
Reply
 
 
0#Clement2012-02-22 12:10
Hope the arab contries remember the 6 days war. Isreal fought with many arab countries & won the battle.
Reply
 
 
0#Clement2012-02-22 22:59
ஆறு நாள் யுத்தம் இன்னும் அரபு நாடுகளுக்கு மறக்காது என நினைக்கிறேன்.
Reply
 
 
0#mohamed ifham2012-02-23 03:16
முட்டாள்கல இந்த உலகத்தில் வெற்றி முஸ்லிம்களுக்கு மற்றும் தான்.
Reply
 
 
0#Clement2012-02-23 04:28
If the victory is only for muslims, what happened to Iraq, Libya, Osama bin ladan? America did what ever they want to do with the contries & leaders. Read the history. What happened to the Nazzar, who was the leader.
Reply
 
 
0#MADURANKULI KURANKAAR2012-02-24 13:59
முட்டாள்களே பொறுத்து இருந்து பாருங்கள். இஸ்ரவேல் எங்கே போகுது என்று. ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு எகுதிகளுக்கே வெற்றிபோல் தெரியும். ஆனால் கடைசியில் முஸ்லிம்களுக்கே வெற்றி அது நிச்சயம்.
Reply
 
 
0#ibnuaboo2012-02-25 23:54
இஸ்லாத்தின் எதிரிகளே ஆயிரத்தி நானுறு வருடங்களுக்கு முன் உதயமான இஸ்லாம் இன்று உலகெங்கும் எப்படிப்பரவியுள்ளது. மற்ற மதங்கள் ஏற்படுத்தாத புரட்சியை இஸ்லாம்தான் ஏற்படுத்தியது சகல அறிவுத்துறைகளிலும். அக்கால காபிர்களின் அரசாட்சிகள் இருந்த மக்கா முதல் ஈரான்,ஈராக் ,மத்தியகிழக்கு நாடுகள் வடாப்ரிகா எல்லாம் இஸ்லாத்தின் காலட்யில் வீழ்ந்தன .ஸ்பெயினை எண்ணூறு வருடகாலம் இஸ்லாம் ஆட்சிசெய்தது கிரேக்க ரோம ஆட்சிகளுக்கு ஆப்பு வைத்தது இஸ்லாமியர் வீரம். முட்டாள்களே அறுபத்தி எழு தோல்வியை தூக்கிப்பிடிக்காதீர்கள்.
Reply
 
 
0#riswan2012-02-26 01:21
காபிர்கள் அவர்கள் தோல்வி அடைவார்கள்.
Reply
 
 
0#Rif : 2012-03-01 21:52
இஸ்ரேல் சம்பந்தமான அல்குரான் வசனங்களை எடுத்து பாருங்கள்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.