2021 மே 15, சனிக்கிழமை

கோறளைப்பற்றில் 22 பேர் டெங்கினால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 29 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வருடம்  ஜனவரி  மாதம் முதலாம் திகதியிலிருந்து  28ஆம் திகதிவரை காலப்பகுதியில் 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.

புதன்கிழமையிலிருந்து (28) எதிர்வரும் 04ஆம் திகதிவரை டெங்கு நுளம்புகளின்  பெருக்கத்தை தடுக்கும் வாரமாக பிரகடனப்படுத்தி, மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களை கோறளைப்பற்று பிதேச செயலாளர் பிரிவில்  அப்பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் வேல்விஷன் நிறுவனம் இணைந்து மேற்கொண்டுவருகின்றன.

விநாயகபுரம் கிராம சேவகர் பிரிவில் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் உட்பட 385 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  இதன்போது,  45 இடங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், ஏழு வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .