2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

Thipaan   / 2017 ஜூலை 20 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்துராஜவெல சரணாலயப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து, உயர்நீதிமன்றம், இன்று (20) உத்தரவிட்டது.

கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவெல சரணாலயப் பகுதியில் கொட்டுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி, முத்துராஜவெல சரணாலயத்தை அண்மித்து வசிக்கும் 35 குடியிருப்பாளர்களால், உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு, உயர்நீதிமன்ற  நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (20) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கொழும்பு மாநகர சபைக்கு மேற்கண்ட தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .