Princiya Dixci / 2016 ஜூலை 20 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு, பெரியமுல்லையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களுக்கும் விமானப்படை வீரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் கைதுசெய்யப்பட்ட ஐவரையும், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் ஹோட்டல் ஊழியர்களும் விமானப்படை வீரர்களும் அடங்குகின்றனர்.
நேற்று (19) அதிகாலை 03 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்கு வந்த விமானப்படை வீரர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago