Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைக்கு 12 வருடங்களுக்கு முன்னர், கூரிய ஆயுதங்களால் தாக்கி, ஒருவரை படுகொலை செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகள் மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட, பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, அந்த மூவருக்கும், நேற்று (12) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
பண்டாரகம அடலுகம எனுமிடத்தில் வைத்து, மொஹமட் மஹ்ரூப் என்பவரை, 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, கூரிய ஆயுதங்களால் தாக்கி, படுகொலை செய்தனர் என்று பிரதிவாதிகள் ஏழு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், மொஹமட் செகரியா (வயது 53), ஜமால்டீன் மொஹமட் பாஹிம் (வயது 51) மற்றும் மொஹமட் இக்பால் (வயது 34) ஆகிய மூவருக்குமே மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago