Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 02 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம், இன்று (02) பிணை வழங்கியுள்ளது.
அவரை, 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மணிலால் வைத்தியதிலக,அனுமதித்தார்..
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்தார்.
தாஜுதீன் படுகொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago