Thipaan / 2017 ஜூன் 01 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைட்டம் தொடர்பிலான வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் கே. மலல்கொட விலகிக்கொண்டார்.
தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தில் (சைட்டம்) மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்கள், இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யலாம் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இலங்கை மருத்துவ சபை, தாக்கல் செய்த மனு மீதான வழக்கிலிருந்தே அவர் விலகிக்கொள்வதாக நேற்று (31) அறிவித்தார்.
இந்நிலையில், அந்த மனுமீதான விசாரணையை, இன்றைய தினத்துக்கு (01) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி, மேற்குறித்த கட்டளையிடப்பட்டிருந்த நிலையில், அதற்கெதிராக, இலங்கை மருத்துவ சபை, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர ஜே டீ அப்றூ, அனில் குணரத்ன, விஜித் கே. மலல்கொட ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்று (31) அழைக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக தான் இருந்த போதுதான் மேற்கண்ட தீர்ப்பு வழக்கப்பட்டது. ஆகையால், இந்த குழாமில் இருந்து தான் விலக்கிகொள்வதாக நீதியரசர் விஜித் கே. மலல்கொட அறிவித்தார். இதனையடுத்தே, வழக்கு இன்று (01) வரை ஒத்திவைக்கப்பட்டது.
20 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago
8 hours ago