2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நிதி மோசடியில் ஈடுபட்ட முகாமையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைப்பாளர்களின் 150 மில்லியன் ரூபாய் நிதியை, ​மோசடி செய்தக் குற்றசாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பலாங்கொடை- சனச வங்கியின் முன்னாள் முகாமையாளரை அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலாங்கொடை நீதவான் நீதிபதி ஜயருவன் திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

48 வயதுடைய குறித்த முகாமையாளர், நேற்று  (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவினை விடுத்துள்ளார்.

குறித்த வங்கியில் வைப்பிலப்பட்ட பணத்துடன் தலைமறைவாகியிருந்த முகாமையாளர், 9 மாதங்களின் பின்னர், இந்த மாதம் 6ஆம் திகதி  மாலை கைதுசெய்யப்பட்டதுடன், 7ஆம் திகதி பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது 27ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைய, நேற்று  அவர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரின் விளக்கமறியல் 10ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X