2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பிலியந்தலை துப்பாக்கிச்சூடு: இருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலையில், மே மாதம் 09ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துக்கு, உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

இரகசியத் தகவலை அடுத்தே, இவ்விருவரையும் புதன்கிழமை மாலை, மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர் என்றும் அத்திணைக்களம் தெரிவித்தது.  

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரியும் சிறுமியொருவரும் பலியாகினர்.   

அத்துடன், இந்த சம்பவத்தினால், பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் சாதாரண பொதுமக்கள் மூவரும் படுகாயமடைந்திருந்தனர்.  

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர், தர்கா நகரத்தையும் மற்றையவர் அஹூங்கல்ல பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.   

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில், நேற்று (08) ஆஜர்படுத்திய போது, அவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரையிலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X