2025 ஜூலை 02, புதன்கிழமை

கணவனை கொலை செய்த மனைவி 6 நாட்களின் பின்னர் கைது

Princiya Dixci   / 2016 மே 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனை ஆயுதங்களால் தாக்கிக் கொலைச் செய்து விட்டுத் தலைமறைவாகிய மனைவியை, 6 நாட்களின் பின்னர் பொலிஸார் கைதுசெய்த சம்வமொன்று, கேகாலை, பெலிகல, ஹத்தனாகொட - ஹரங்கஹவப் பகுதியில், நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இச்சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த 19ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் வாய்த்தக்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதில் மனைவி, கணவனைக் கத்தி மற்றும் பொல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

தந்தை உயிரிழந்தமையை அறியாத 3 மற்றும் 5 வயதுக் குழந்தைகள் இருவரும் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளதுடன், வீட்டிலிருந்த வாழைப்பழங்களை உண்டு சுமார் ஐந்து நாட்கள் சடலத்துடன் தனிமையில் இருந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றத்தையடுத்து, இக்கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

சிறுவர்கள் இருவரையும், அவர்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், நண்பியொருவரின் வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் தாயைக் கைதுசெய்ததாகத் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .