2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல - எம்புல்கம பிரதேசத்தில் கடந்த மாதம் 15ஆம் திகதி நபர் ஒருவரை கொலை செய்து, மேலும் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகாயமடைய செய்த சம்பவத்துக்கு ஒத்தாசை புரிந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்று (16) பிற்பகல் இவர்கள்  ஹோமாகம மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

22 மற்றும் 26 வயதுடைய இருவரும் தெடிகமுவ மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என,  தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 3 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .