2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரிலுள்ள இரு  பலசரக்குக் கடைகளில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரண்டு கடைகளும் உடைக்கப்பட்டு பணம் உட்பட பீடி, பால்மா,  தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள்  ஆகியன திருட்டுப்போயுள்ளதென்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பலசரக்குக் கடையில் சுமார் ஒன்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, செங்கலடிப் பிரதேசத்திலும் இரு  சிறிய கடைகளில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருட்டுப்போயுள்ளமை தொடர்பிலும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .