2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பாதாள உலகக்கோஷ்டி உறுப்பினர் 'போம்ப சிர' கொலை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் 'போம்ப சிர' என அறியப்பட்ட ஒருவர் இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இரத்மலானையிலுள்ள ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் (வயது 57) களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னர் தப்பியோடியுள்ளதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை கைதுசெய்யும் முகமாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். (குஷால் சமத்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .