2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வீட்டில் உறங்கியவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த  மகேந்திரன் சிவப்பிரகாசம் (வயது 32)  என்பவர் அவரது வீட்டிலிருந்து புதன்கிழமை (09) காலை சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (08)  இரவு தனது  மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிய இவர்,  காலையில் சடலமாக  காணப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், குறித்த வீட்டிற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--