2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சாரதி சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் வாகனங்கள் திருத்தும் நிலையமொன்றில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்திலிருந்து  அதன் சாரதியான கண்டி பல்லேகலவைச் சேர்ந்த இராசையா இராஜேந்திரப்பிரசாத் (வயது 52) என்பவர் சடலமாக இன்று புதன்கிழமை (02) காலை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நிலையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (01) திருத்துவதற்காக வாகனத்தை கொண்டுவந்த இவர், அந்த  வாகனத்தில் உறங்கியதாகவும் இந்த நிலையில்,  இன்;றையதினம்; காலை  (02)  வாகனத் திருத்துநர்கள் சென்று பார்த்தபோது அவர்  மரணமடைந்திருந்ததாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக  பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .