2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பால் கொடுக்க மறுத்த மனைவியை கத்தரியால் குத்திய கணவன்

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மறுத்த மனைவியை அவரது கணவன் கத்தரியால் குத்தி காயப்படுத்திய சம்பவமொன்று பேருவளையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தன்னுடைய கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மறுத்த மனைவியை அவரது கணவன் தாக்கியமையால் கடும் காயங்களுக்கு உள்ளான மனைவி, பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேற்று(03) பகல் சென்ற கணவன் வைத்தியசாலையில் வைத்தே மனைவியை கத்தரியால் ஐந்து இடங்களில் குத்தியுள்ளார்.

சந்தேகநபரான அந்த பெண்ணின் கணவன் முச்சக்கரவண்டியின் சாரதி என்பதுடன் அவர், கத்தரியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி, பேருவளை நகர சபையின் ஊழியராவார்.

காயமடைந்த பெண் வேறொருவருடன் தகாதஉறவு வைத்திருந்ததாகவும் அதனால் தன் கணவன் மற்றும் குழந்தையை வேறுபடுத்தி பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி தன்னுடைய குழந்தைக்கும் பால் கொடுப்பதற்கு மறுத்துள்ளார். அதன்போதே கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காயமடைந்த மனைவி பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக தன்னுடைய ஒருவயதும் மூன்று மாதங்களேயான குழந்தையை தூக்கிக்கொண்டு கணவன், வைத்தியசாலையிக்கு நேற்று காலை சென்றுள்ளார்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்குமாறு கணவன் கேட்டபோதும் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையை தூக்கிகொண்டு கணவன் வீட்டுக்சென்றுவிட்டார்.

வீட்டுக்சென்ற அவர், பகல் சாப்பாட்டு சமைத்து எடுத்துகொண்டு குழந்தையும் தூக்கிக்கொண்டு மனைவியை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது சாப்பாட்டை ஏற்பதற்கு மறுத்த அந்தபெண், தன் குழந்தைக்கும் பால் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த சந்தேகநபரான கணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிகோலால் மனைவியை ஐந்து இடங்களில் குத்தியுள்ளார்.

அந்த பெண் தன்னுடைய கள்ளபுருஷன் கொடுத்த உணவை உட்டுகொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 04 July 2014 04:05 PM

    நியாயமான ஆத்திரம், ஆனால் தாக்குதல் அளவு அதிகம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .