Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 20 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு எதிரணியிலுள்ள மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவரும் வழக்குகளில் சிக்குண்டவருமாக ஒருவர், விமோசனம் தேடி அழைந்துகொண்டிருந்த போது, அமைச்சரவையிலுள்ள விளையாட்டு விடயதானங்களுக்கும் பொறுப்பான அமைச்சர் ஒருவர், 'நாட்டின் தலைவரைச் சந்திக்கலாம் வாருங்கள்' என்று அழைத்தாராம்.
இவ்வாறு அழைப்பு விடுத்தவர், கடந்த தேர்தலின் போது தோல்வியுற்று, பின்னர் தேசியப் பட்டியல் மூலம் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டவர் என்று கூறப்படுகிறது. நாட்டின் தலைவரோடு மிக நெருங்கிப் பழக வேண்டும் என்பதற்காகத்தான், அவர் மேற்கண்ட நபருக்கு அழைப்பொன்றையும் விடுத்திருந்தாராம்.
விமோசனத்தை தேடிக்கொண்டிருந்தவர், ஆரம்பித்திலேயே அந்த அழைப்புக்கு இணக்கம் தெரிவித்திருந்தாராம். அதன் பின்னர், இந்த சந்திப்பை ஏற்படுத்தவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் அந்த அமைச்சர் முன்னெடுத்துக்கொண்டிருந்தாராம்.
இவ்வாறிருக்க, விமோசனம் தேடியவரின் ஊரைச் சேர்ந்தவர்கள், 'நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று அவரைப் பார்த்து கேட்கத் தொடங்கினார்களாம். இந்த வேலைகளுக்கு போய்விட்டு, இங்கேயே மீண்டும் வராவிட்டால் சந்தோசம் என்றும் கூறினார்களாம். இதனால், என்ன செய்வதென்று அறியாமல், அவர் முழித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
11 minute ago
22 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
45 minute ago
52 minute ago