2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தூஷணத்தால் திட்டியவர் கைது

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, அதிகாரிகளை தூஷணத்தால் திட்டியதுடன் மிகவும் அசாதாரண முறையில் நடந்துகொண்ட ஒருவரை, நாடாளுமன்ற பொலிஸார் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம், 30 திகதி மாலையில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஜயவர்தனபுர பிரதான பாதுகாப்பு வாயிலின் ஊடாகவே குறித்த நபர், நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்துள்ளார் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது. 

அங்கு வந்ததும், குறித்த நபர் அங்கிருந்த அதிகாரிகளை தூஷணத்தால் திட்டியதுடன், மிகவும் அசாதாரணமான முறையில் நடந்துகொண்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்துக்குள் அவர், என்ன நோக்கத்துக்காக நுழைந்துள்ளார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .