2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் றியல் மட்ரிட்

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற வலென்சியாவுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில், தமது மத்தியகளவீரர் டொனி க்றூஸ் மூலையுதை மூலம் நேரடியாகப் பெற்ற கோல் மூலமாக ஆரம்பத்தில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

பின்னர் போட்டியின் 39ஆவது நிமிடத்தில், சக முன்களவீரர் லூகா மோட்ரிட்ச்சின் கோல் கம்பத்தை நோக்கி உதையானது மீண்டும் திரும்பி வந்த நிலையில், அதை நெஞ்சால் கட்டுப்படுத்தி கோலாக்கிய றியல் மட்ரிட்டின் இன்னொரு முன்களவீரரான இஸ்கோ முதற்பாதி முடிவில் றியல் மட்ரிட்டின் முன்னிலை இரட்டிப்பாக்கினார்.

இந்நிலையில், சக முன்களவீரர் லூகா ஜோவிச்சிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கோலாக்க்கிய லூகா மோட்ரிட்ச், றியல் மட்ரிட்டின் முன்னிலையை 3-0 என்ற கோல் கணக்கில் அதிகரித்தார்.

இதேவேளை, போட்டியின் இறுதி நிமிடங்களில், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் மூலம் றியல் மட்ரிட்டின் அணித்தலைவரும், பின்களவீரருமான சேர்ஜியோ றாமோஸின் கையில் பந்து பட்டதன் காரணமாக வழங்கப்பட்ட பெனால்டியை வலென்சியாவின் அணித்தலைவரும், முன்களவீரருமான டனி பரிஜோ கோலாக்கிய நிலையில், இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .