2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இலங்கை எதிர் இந்தியா: 2ஆவது T20I போட்டி இன்று

Editorial   / 2020 ஜனவரி 07 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ளது.

கெளகாத்தியில் நேற்று முன்தினமிரவு நடைபெறவிருந்த போட்டியின் நாணயச் சுழற்சி மாத்திரமே நடைபெறக்கூடியதாக இருந்து மழை காரணமாக எந்தவொரு பந்தையும் வீச முடியாமல் போன நிலையில், தொடரைக் கைப்பற்றுவதற்கு இரண்டு அணிகளும் இப்போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்திலுள்ளன.

முதலாவது போட்டிக்கு முன்பதாக கருத்துத் தெரிவிக்கையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் ஓராண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸை போட்டியை முடிப்பவராக இலங்கையணித் தலைவர் லசித் மாலிங்க அடையாளப்படுத்தியிருந்தபோதும், முதலாவது போட்டிக்கான அணியில் அவர் இடம்பிடிக்காத நிலையில் அவருக்கு இத்தொடரில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகிறது.

மறுபக்கமாக இந்திய அணியைப் பொறுத்தவரையில், ஜஸ்பிரிட் பும்ராவுடன், ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி ஆகியோரையும் முதலாவது போட்டியில் பெயரிட்டிருந்த நிலையில், தமதிடங்களை உறுதிப்படுத்த ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனிக்கு கிடைத்த பொன்னாக வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி: 1. அவிஷ்க பெர்ணான்டோ, 2. தனுஷ்க குணதிலக, 3. குசல் பெரேரா (விக்கெட் காப்பாளர்), 4. ஒஷாட பெர்ணான்டோ, 5. பானுக ராஜபக்‌ஷ, 6. தனஞ்சய டி சில்வா, 7. தசுன் ஷானக, 8. இசுரு உதான, 9. வனிது ஹசரங்க, 10. லஹிரு குமார, 11. லசித் மலிங்க (அணித்தலைவர்).

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: 1. ஷீகர் தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி (அணித்தலைவர்), 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), 6. ஷிவம் டுபே, 7. வொஷிங்டன் சுந்தர், 8. ஷர்துல் தாக்கூர், 9. குல்தீப் யாதவ், 10. ஜஸ்பிரிட் பும்ரா, 11. நவ்தீப் சைனி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .