2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணத்தையடுத்தும் விளையாடவுள்ள மலிங்க?

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையணிக்கு தலைமை தாங்குவதை இலக்கு வைத்துள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான இலங்கையணியின் தலைவர் லசித் மலிங்க, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு தனது உடல் ஒத்துழைக்கும் என உறுதியாக நம்புகின்றார்.

முன்னதாக, இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஓய்வுபெறப் போவதாக 36 வயதான லசித் மலிங்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை கூறியதாகவும், ஆனால் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என லசித் மலிங்க கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான தொடரில் இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில், இலங்கையணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக லசித் மலிங்க திரும்பிய நிலையில், அவரின் கீழ் ஒரு போட்டியில் வென்றதோடு, ஒரு போட்டியில் சமநிலை முடிவையும், மற்றைய எட்டுப் போட்டிகளிலும் இலங்கை தோற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .