2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

தென்கொரியாவை வீழ்த்தியது பிரேஸில்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற தென்கொரியாவுடனான சர்வதேச சிநேகபூர்வ போட்டியை பிரேஸில் வென்றது.

சக முன்களவீரர் பிலிப் கோச்சினியோ, பின்களவீரர் றெனான் லொடி பங்களிப்பில் போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து தலையால் முட்டிக் கோலைப் பெற்ற பிரேஸிலின் லூகாஸ் பக்குவாட்டா தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து போட்டியின் 36ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 20 மீற்றர் தூரத்திலிருந்து பிறீ கிக்கொன்றின் மூலம் கோலொன்றைப் பெற்ற பிலிப் கோச்சினியோ பிரேஸிலின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

பின்னர் போட்டியின் 60ஆவது நிமிடத்தில், பெனால்டி பகுதிக்கு வெளியிலிருந்து டனிலோ பெற்ற கோலோடு இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.

இதேவேளை, தம்நாட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஜோர்ஜியாவுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றிருந்தது. குரோஷியா சார்பாக, இவான் பெரிசிச் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது. ஜோர்ஜியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜியோர்ஜி பபுனாஷ்விலி பெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .