2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நான்காவது சுற்றில் லிவர்பூல், செல்சி

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிக்கு லிவர்பூல், செல்சி ஆகியன தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற எவெர்ற்றனுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில், கேர்டிஸ் ஜோன்ஸ் பெற்ற கோலின் மூலமாக 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே நான்காவது சுற்றுப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில், கலும் ஹட்சன்-ஓடோய், றொஸ் பார்க்லி பெற்ற கோல்களுடன் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றது.

இந்நிலையில், மிடில்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முடித்துக் கொண்டது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகாஸ் மோரா பெற்றதோடு, மிடில்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்லி பிளெட்சர் பெற்றிருந்தார்.

அந்தவகையில், நான்காவது சுற்றுக்குத் தகுதிபெறும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், மிடில்ஸ்பேர்க்குகிடையே மீண்டும் போட்டி இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--