Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பியொரென்டினாவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றது.
பியொரொன்டினா சார்பாக, ஃபெடெரிக்கோ சியெஸா, டுஸன் விளாஹோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற சம்ப்டோரியாவுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.
லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் மூன்று கோல்களையும், பிலிப் கைசெடோ, பர்டொலோமெயு ஜசிந்தோ குய்ஸாங்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். சம்ப்டோரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கரோல் லினெட்டி பெற்றார்.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் 48 புள்ளிகளுடன் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகிறது. 46 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 45 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லேஸியோவும், 35 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லாண்டாவும் காணப்படுகின்றன.
21 minute ago
31 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
54 minute ago