2021 ஜனவரி 27, புதன்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறினார் வக்னர்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு, நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில், எட்டாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை நீல் வக்னர் அடைந்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட், 13ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. ககிஸோ றபாடா, 3. நீல் வக்னர், 4. ஜேஸன் ஹோல்டர், 5. ஜஸ்பிரிட் பும்ரா, 6. ஜேம்ஸ் அன்டர்சன், 7. வேர்ண் பிலாந்தர், 8. கேமார் றோச், 9. இரவிச்சந்திரன் அஷ்வின், ஜொஷ் ஹேசில்வூட்.

இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 119 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் உப தலைவர் பென் ஸ்டோக்ஸ், 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஸ்டீவ் ஸ்மித், 2. விராட் கோலி, 3. கேன் வில்லியம்சன், 4. செட்டேஸ்வர் புஜாரா, 5. அஜின்கியா ரஹானே, 6. ஹென்றி நிக்கொல்ஸ், 7. திமுத் கருணாரத்ன. 8. டொம் லேதம், 9. பென் ஸ்டோக்ஸ், 10. மாயங்க் அகர்வால்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவிச்சந்திரன் அஷ்வின்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .