2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

யூரோ கிண்ணத்தில் நடப்புச் சம்பியன்கள்

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கு, நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல் தகுதிபெற்றுள்ளது.

லக்ஸம்பேர்க்கில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே யூரோ கிண்ணத் தொடருக்கு போர்த்துக்கல் தகுதிபெற்றுக் கொண்டது.

போர்த்துக்கல் சார்பாக, ப்ரூனோ பெர்ணான்டஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், கொஸோவாவில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியொன்றில், 4-0 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே யூரோ கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றுள்ள இங்கிலாந்து வென்றது.

இங்கிலாந்து சார்பாக, ஹரி விங்ஸ், ஹரி கேன், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, அல்பானியாவில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில், 2-0 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றுள்ள பிரான்ஸ் வென்றது.

பிரான்ஸ் சார்பாக, கொரென்டின் டொலிஸோ, அன்டோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .