வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 26.11.2018 - 30.11.2018

26.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மெல்ஸ்டாகோர்ப் மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 736 மில்லியனாக பதிவாகியிருந்தது. விதுல்லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கி மற்றும் அமானா வங்கி பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. எஸ்எம்பி லீசிங் பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.  

27.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 460 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் காகில்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.   

28.11.2018  

ஸ்ரீ லங்கா டெலிகொம், நெஸ்லே லங்கா மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 409 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு லயன் பிரெவரி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

29.11.2018  

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டல்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 745 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, லயன் பிரெவரி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு பங்கு விற்பனையில் காணப்பட்டது.  

30.11.2018 

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 1.51% உயர்வையும் S&P SL20 2.42% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 755 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.  


வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 26.11.2018 - 30.11.2018

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.