2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மரங்களை நட்டு, சூழலை பாதுகாப்பதுடன் பணத்தையும் சம்பாதியுங்கள்

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் வர்த்தக ரீதியிலான வனாந்தர முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்கும் சதாஹரித பிளான்டேஷன்ஸ் லிமிடெட், தனது அகர்வுட் செய்கையை ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் இலங்கையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குவதை சதாஹரித உறுதி செய்துள்ளது. இந்த செய்கையை ஊக்குவிக்கும் வகையில் இங்கிரிய பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 250,000 அகர்வுட் கன்றுகளை வளர்த்து வருகிறது. இந்த வளர்ப்பு பகுதியிலிருந்து வருடமொன்றில் 1 மில்லியன் செய்கைகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வளர்க்கப்படும் செய்கைகளின்; விதைகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, முறையாக வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, கன்றுகள் எனும் நிலையை எய்திய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கப்படுகின்றன. இந்த கன்றுகள் வளர்ப்பு பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிடக்கூடிய வாய்ப்பு அண்மையில் கிடைத்திருந்தது.

இங்கிரிய பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு பகுதியின் மற்றுமொரு விசேட அம்சமாக, 500,000 செய்கைகள் வரை பராமரிக்கும் தன்மையை கொண்டிருப்பதை குறிப்பிட முடியும். இந்த செய்கையின் ஊழியர்கள் பராமரிப்பு செய்பாடுகளை முன்னெடுப்பதற்காக பெருமளவு பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக பயிர்களை பராமரிப்பதற்காக பயிற்சிகளை இவர்கள் பெற்றுள்ளனர். அகர்வுட் பயிர்கள் வியட்நாம் நாட்டில் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தாவரம் பயிரிடப்பட்டது முதல், வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கப்படக்கூடிய நிலையை எய்தும் வரை முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களின் மூலம் பராமரிக்கப்படுகிறது. தமது உள்ளக ஊழியர்களுக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிபுணர்களை வரவழைத்து வர்த்தக பயிர்ச் செய்கையை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.


11 வருடங்களுக்கு முன்னர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த சதாஹரித பிளான்டேஷன்ஸ் கம்பனி, வர்த்தக வனாந்தர செய்கை பராமரிப்பு தொடர்பில் அகர்வுட் செய்கையை ஊக்குவித்து வருகிறது. குறுகிய காலப்பகுதியில் அகர்வுட் செய்கையை முன்னெடுப்பதற்கான மாதிரி அனுமதியை மின்னெஸ்சொடா பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்திடமிருந்து முழுமையான வழிகாட்டலும் உதவிகளும் சதாஹரித பிளான்டேஷன்ஸ் கம்பனிக்கு வழங்கப்படுகிறது. இந்த கம்பனியின் செயற்பாடு என்பது விவசாய அமைச்சின் தேசிய தாவரவியல் சேவை பிரிவின் மற்றும் மத்திய சூழல் அதிகார சபையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படுவதுடன், அகர்வுட், தேக்கு மற்றும் சந்தனம் போன்ற திட்டங்களுக்கு நிகரானதாக அமைந்துள்ளன. இந்த திட்டங்களின் நிலையாண்மை என்பது என்பது ISO 14001 தரச்சான்றுக்கு அமைவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகர்வுட் என்பது கருப்பு மற்றும் கடும் பழுப்பு நிறத்திலான பெறுமதி வாய்ந்த தாவரமாக அமைந்துள்ளது. இந்த வகை தாவரங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவு கேள்வி காணப்படுவதுடன், தற்போது மலேசியா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் அதிகளவு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. வெளிக்கள வளர்ப்பு முறையை பயன்படுத்தி அகர்வுட் செய்கையை இந்த நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இதன் மூலம் பின்தங்கிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அகர்வுட் செய்கை என்பது உயர்தரம் வாய்ந்த வாசனை குற்றிகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவை இஸ்லாமிய மதத்தவர்களின் மூலம் இந்த வாசனைக்குற்றிகள் பெருமளவில் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மருத்துவதேவைக்காகவும் இந்த அகர்வுட் குற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குற்றி கிலோகிராம் ஒன்றின் விலை 2000 – 10,000 அமெரிக்க டொலர்கள் வரை சர்வதேச சந்தையில் விற்பனையாகின்றன.


இந்த அகர்வுட் கன்றொன்றை வாடிக்கையாளர்கள் 1400 ரூபா எனும் விலைக்கு கொள்வனவு செய்து தமது வீட்டுத் தோட்டங்களில் பயிர்செய்து, 6 வருடங்களின் பின்னர் 25000 – 50000 ரூபா வரை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பெற்றுக் கொள்ள முடியும். அகர்வுட் மரங்களின் மூலம் எண்ணெய் வகையை பெற்றுக் கொள்ள சதாஹரித நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது.

அகர்வுட் செய்கைக்கு உகந்த பிரதேசங்களாக களுத்தறை, கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

-ச.சேகர்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .